2016-09-12 17:00:00

சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் இணையதள பக்கம் துவக்கம்


செப்.12,2016.  பாலினவகையில் முறைகேடாக நடத்தப்பட்ட சிறார்களுக்கான பராமரிப்பு மற்றும் குணப்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்களை வடிவமைத்துள்ளது, சிறார் பாதுகாப்பு திருப்பீட அவை.

கடந்த வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை உரோம் நகரில் தன் கூட்டத்தை நடத்திய சிறார் பாதுகாப்புக்கான திருப்பீட அவை, காயங்களை குணப்படுத்தல், கல்வி, பராமரிப்பு, பயிற்சி போன்றவை குறித்த வழிமுறைகள் அடங்கிய ஏட்டை தயாரித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளது.

ஒவ்வொரு கண்டத்திலும் சிறார் பாலின முறைகேடுகளுக்கு எதிரான கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து தெரிவிக்கும் இத்திருப்பீட அவை, அருள்பணியாளர்களால் பாலினவகையில் முறைகேடாக நடத்தப்பட்ட சிறாருள் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, செப நாள் ஒன்று பல்வேறு நாடுகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கிறது.

'அன்புடைய தாயாக' என்ற தலைப்பில் திருத்தந்கை பிரான்சிஸ் அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில்  வெளியிட்ட வழிமுறைகள் குறித்தும் விவாதித்த இந்த அவை, தன் நடவடிக்கைகளை வெளியிடவும், தலத்திருஅவைகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கவும் உதவும் நோக்கில், இணையதள பக்கம் ஒன்றை திறக்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.