2016-09-09 16:51:00

யூபிலி ஆண்டு திருப்பயணிகளின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது


செப்.09,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவின் வழியாக, ஒரு கோடியே ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் சென்றுள்ளனர் என்று, திருப்பீட புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி அவை அறிவித்துள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இலட்சக்கணக்கான திருப்பயணிகளின் அனுபவம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, இத்திருப்பீட அவையின் அருள்பணி யூஜின் சில்வா அவர்கள், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உரோம் நகருக்கு வந்த திருப்பயணிகளின் எண்ணிக்கை மிகவும் வியக்க வைக்கிறது என்று கூறினார்.

பொதுவாக, கோடையின் கடும் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பெருமளவான சுற்றுலாப் பயணிகள் உரோம் நகருக்கு வருவதைத் தவிர்ப்பார்கள், ஆனால், இவ்வாண்டு இந்த மாதங்களில், திருப்பயணிகள் இவ்வளவு எண்ணிக்கையில் வந்திருப்பது, இரக்கம், அவர்களின் இதயத்தை எவ்வளவு தூரம் தொட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது என்று தெரிவித்தார் அருள்பணி சில்வா.

யூபிலி ஆண்டில், திருஅவையின் பணி, இரக்கம் என்பதை திருத்தந்தை நினைவுபடுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அருள்பணி சில்வா அவர்கள், வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்கள் வழியாக திருத்தந்தை நமக்கு சிறப்பான எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.