2016-09-08 14:44:00

இரக்கத்தின் காலம் - மனிதகுலம் உய்வுபெற உழைப்பவர்கள்


ஒரு சமயம், ஜப்பானின் ஒரு படைப் பிரிவினர், போரிடுவதற்காக அந்நாட்டின் ஒரு பகுதியில் தங்கியிருந்தபோது, தற்செயலாக, காசன்(Gasan) என்று புத்த துறவி வாழ்ந்த புத்த பகோடாவில் தங்களுடைய தலைமையகத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது காசன் அவர்கள், தனது சமையல்காரரிடம், நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதையே படை அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று சொன்னார். இதை அறியவந்த ஓர் அதிகாரி, துறவியிடம் சென்று, நாங்கள் எல்லாம் நாட்டைக் காக்க எங்கள் உயிரைத் தியாகம் செய்கிறோம், நீங்கள் ஏன் எங்களை, நல்லவிதமாகக் கவனிக்கக் கூடாது? என்று கோபமாகக் கேட்டார். அதற்கு துறவி காசன், நீங்கள் எல்லாம் எங்களை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  நாங்கள் எல்லாம் மனித குலத்தை நல்லவிதமாகக் காப்பாற்றப் பாடுபடும் மனிதகுலப் போர் வீரர்கள், இதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று தீர்க்கமாகச் சொன்னார். இந்த ஜென் கதைக்கு ஒரு பெரியவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். படை வீரர்கள், மக்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்ற, எந்த அளவுக்குப் பாடுபடுகிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள், நல்லவிதமாக, அன்பும் கருணையும் கொண்டு, நல்ல சிந்தனையோடு வாழ, துறவிகள் எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். எனவே இவ்விருவருமே மனிதகுலம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உழைக்கிறார்கள்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.