2016-09-06 16:50:00

இரக்கம் குறித்த இணையதளம் வழியான கருத்தரங்கு


செப்.,06,2016. 'இரக்கம்: உலகின் இருப்பிற்கான ஒரு வழி' என்ற தலைப்பில், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி இணையதள கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடுச் செய்துள்ளன, ஆஸ்திரேலிய மறைமாவட்டங்கள்.

Broken Bay என்ற அமைப்புடன் இணைந்து, இம்மாதம் 20ம் தேதி நடத்தப்பட உள்ள இந்த இணையதள கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு, ஆன்மீகம் மற்றும் இறையியல் சார்ந்த தலைப்புக்களில் தகவல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாக தங்களைத் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் இரக்கத்தின் சிறப்புக் கூறுகள் குறித்த அனைத்து விவரங்களும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

கத்தோலிக்க விசுவாசத்தின் மையப் பகுதியாக இருப்பவைகள் குறித்து பல்வேறு வல்லுனர்கள் பகிரும் கருத்துக்கள் அனைத்தும், இலவசமாகவே வழங்கப்படும் என்றார் இந்த Broken Bay நிறுவனத்தின் தலைவர் Gerard Goldman.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.