2016-09-05 16:26:00

குண்டுவீச்சு தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆயர் பேரவையின் கண்டனம்


செப்.,05,2016. பாகிஸ்தானின் பேஷாவார் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை.

அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமான தாக்குதல்கள், மனிதாபிமானமற்றவை, மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தன் அறிக்கையில் குறிப்பிட்ட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், உரிய நேரத்தில் தலையிட்டு பொதுமக்களை மேலும் உயிரிழப்புகளிலிருந்து காப்பாற்றிய பாதுகாப்புத் துறையினரின் செயலை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து மக்களின் வாழ்வதற்கான உரிமைகளை உறுதிச் செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் ஆயர் அர்ஷத்.

இதற்கிடையே, பேஷாவரின் கிறிஸ்தவ குடியிருப்பு அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஒரு கிறிஸ்தவர் இறந்துள்ளதாகவும், இரு கிறிஸ்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி புனித மிக்கேல் பங்குதள அருள்பணி யூனிஸ் ரியாஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.