2016-08-29 15:30:00

படைப்பைப் பாதுகாக்கும் கிறிஸ்தவ சபைகளின் உலக செப நாள்


ஆக.29,2016. செப்டம்பர் 1, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும், படைப்பைப் பாதுகாக்கும் கிறிஸ்தவ சபைகளின் உலக செப நாள் பற்றியும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற வியாழனன்று, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் சகோதரர்களுடன் இணைந்து, படைப்பைப் பாதுகாக்கும் உலக நாளை நாம் சிறப்பிக்கவுள்ளோம், இந்நாள், சுற்றுச்சூழலையும், இயற்கையையும் மதித்து, வாழ்வைப் பாதுகாப்பதற்கான நம் பொதுவான அர்ப்பணத்தை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை. இந்நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் செப வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்.

படைப்பைப் பாதுகாக்கும் இந்த உலகளாவிய செப நாள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் 1989ம் ஆண்டில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் வழியாக, கத்தோலிக்கத் திருஅவையில் இந்த உலக நாள் உருவாக்கப்பட்டது.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.