2016-08-27 16:46:00

அகதிகள் தடுப்பு முகாமை மூடுவதற்கு ஆஸ்திரேலிய அரசு இசைவு


ஆக.27,2016. பாப்புவா நியு கினி பகுதியிலுள்ள மானுஸ் தீவு அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படும் என்ற ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ளது அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை.

ஆஸ்திரேலிய அரசு நிர்வகிக்கும் இந்த முகாமில், சரியான ஆவணங்கள் இன்றி, அந்நாட்டுக் கடற்பகுதியைச் சென்றடையும் குடியேற்றதாரர், மனிதமற்ற முறையில் நடத்தப்படுவதாக, வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   

இந்நிலையில், பாப்புவா நியு கினி பிரதமர் Peter O'Neill, ஆஸ்திரேலிய குடியேற்றதாரர் துறை அமைச்சர் Peter Dutton ஆகிய இருவரும் இணைந்து, இம்முகாம் மூடுவது பற்றி அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதாக பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் அறிவித்த, ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் அலுவலக இயக்குனர் அருள்பணி Maurizio Pettena அவர்கள், இந்த முகாமில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, அகதிகள் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்றார்.

இந்த முகாமில், பெரும்பாலும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.