2016-08-26 16:44:00

அமெரிக்க, ஈரான் சமயத் தலைவர்கள் சகிப்புத்தன்மைக்கு அழைப்பு


ஆக.26,2016. மற்றவரின் மத மரபுகளை மதிக்கும் விதமாக, கலாச்சாரச் சந்திப்பு, சகிப்புத்தன்மை, உரையாடல், அமைதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் அறிக்கை ஒன்றை, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்களும், ஈரான் சமயத் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

மொத்தமாக அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதும், அவற்றை அதிகரிப்பதும், பயங்கரவாத நடவடிக்கைகளும் நன்னெறிக்கு முரணானவை என்றும் இச்சமயத் தலைவர்களின் அறிக்கை மேலும் கூறுகின்றது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர் பிரதிநிதிகளும், ஈரான் சமயத் தலைவர்கள் Mahdi Hadavi Moghaddam Tehrani, Abolghasem Alidoost ஆகியோர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவும் நியு மெக்சிகோவில் நடைபெற்ற உரையாடலில் கலந்துகொண்டு, பொதுவான அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு வெளியிட்டனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.