2016-08-23 13:49:00

இது இரக்கத்தின் காலம் : அன்புப்பணியின் அளவுகோல், அர்ப்பணம்


அன்னை தெரசாவின் பணிகளைப் பார்வையிடவும், அவரோடு சேர்ந்து பணி செய்யவும் நூற்றுக்கணக்கானோர் கொல்கத்தா சென்றிருக்கின்றனர். ஒரு முறை, அன்னையுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு பத்திரிக்கையாளர், அந்த நாள் இறுதியில் அன்னையிடம்: "எனக்கு யாராவது பத்தாயிரம் டாலர்கள் தருகிறேன் என்றால் கூட இது போன்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன்." என்றாராம். அதற்கு அன்னை தெரசா அவரிடம்: "நானும் அப்படித்தான். பத்தாயிரம் டாலருக்காக இந்த வேலைகளைச் செய்ய மாட்டேன்." என்று பதில் சொன்னாராம்.

பணத்தை வைத்து, பணியை மதிப்பிடுவது, வர்த்தக உலகின் அளவுகோல். பணியால் எத்தனை பேர் மனிதர்களாக மாற்றமுடியும் என்று எண்ணிப்பார்ப்பது, புனிதத்துவத்தின் அளவுகோல். இரக்கம் என்ற அளவுகோலை மட்டுமே பயன்படுத்தி, பல்லாயிரம் உயிர்களுக்கு, மனித மாண்பைத் தந்த அன்னை தெரேசா, புனிதர் நிலையை அடையவிருப்பது, நமக்குக் கிடைத்த ஒரு வரம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.