2016-08-22 15:51:00

இது இரக்கத்தின் காலம் : குறையில்லாத மனிதரில்லை


அமெரிக்க ஐக்கிய நாட்டில், 1902ம் ஆண்டு முதல், 1932ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராகவும், 1930ம் ஆண்டு சனவரி, பிப்ரவரியில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் ஆலிவர் வெண்டெல் ஹோல்ம்ஸ் ஜூனியர்(Oliver Wendell Holmes Jr.). இவர் ஒரு சமயம் வாஷிங்டன் நகரில் இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு வழக்கு தொடர்பாக, தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரிடம் வந்த பயணச்சீட்டு பரிசோதகர், “ஐயா, பயணச்சீட்டு..? என்று கேட்க, அதைத் தேடிக்கொண்டே இருந்தார் ஹோல்ம்ஸ். மிகவும் புகழ்மிக்க அவரிடம், “ஐயா, தாங்கள் வீடு திரும்பியதும், எங்களுக்குப் பயணச்சீட்டை அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி விடைபெற முயன்றார் பரிசோதகர். அப்போது ஹோல்ம்ஸ் அவர்கள், “நண்பரே, அந்தப் பயணச்சீட்டைத் தொலைத்ததற்காக நான் கவலைப்படவில்லை, ஆனால், எந்த ஊரில் இறங்க வேண்டும் என்பது அதில்தானே குறிக்கப்பட்டுள்ளது” என்றாராம்.

அன்பர்களே, குறையில்லாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவருக்கும் குறைகளும் உண்டு, நிறைகளும் உண்டு. நமது குறைகள், மற்றவர்களைப் பாதிக்கின்றபோது, அவை பிரச்சனைகளை உருவாக்குகின்றன. எனவே, மற்றவரது குறைகளையே பார்த்துக்கொண்டிராமல், நமது பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்வது நல்லது.        

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.