2016-08-16 15:42:00

அனைத்து பங்களாதேஷ் மக்களும் பயங்கரவாதத்தை எதிர்க்க அழைப்பு


ஆக.16,2016. மதத்தின் பெயரால் வன்முறை பயன்படுத்தப்படுவதற்கு எதிராக, பங்களாதேஷ் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரும், கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பங்களாதேஷ் காவல்துறை நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய, தினாஷ்பூர் ஆயர் செபஸ்டியான் டுடு அவர்கள், மதத்தின் பெயரால் இடம்பெறும் உரிமை மீறல்களையும், கொலைகளையும், எந்த நலமான மனிதரும், எந்த மதமும் ஆதரிக்காது என்று கூறினார்.

பங்களாதேஷ் நாடு, பல மதங்களையும், பல கலாச்சாரங்களையும் கொண்டிருக்கும் நாடு, எனவே, நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் சமயப் பயங்கரவாதத்திற்கும், ஒழுங்கற்ற ஆட்சிக்கும் எதிராகச் செயல்படுமாறு விண்ணப்பித்துள்ளார், ஆயர் செபஸ்டியான்.

இக்கருத்தரங்கில், முஸ்லிம், இந்து, புத்த மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் தலைவர்கள் உட்பட, ஏறத்தாழ எட்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.