2016-08-15 15:49:00

வாழ்வுக்கு ஆதரவாக பணியாற்றியவருக்கு அமெரிக்க ஆயர்கள் விருது


ஆக.15,2016. வாழ்விற்கு ஆதரவாகச் செயல்படுவோரை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் வாழ்வு விருது, இவ்வாண்டில் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனித மாண்பை பாதுகாப்பவர்களுக்கும், வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஊக்குவிப்பவர்களுக்கும், 2007ம் ஆண்டு முதல், அமெரிக்க ஆயர்களால் வழங்கப்பட்டுவரும் இவ்விருதை, நியூ யார்க் கர்தினால் Timothy Dolan அவர்கள் வழங்கினார்.

அட்லாண்டா பெருமறைமாவட்டத்தில் 'வாழ்வை மதிக்கும் மேய்ப்புப்பணிகள்' என்ற அமைப்பின் இயக்குனராகச் செயலாற்றிவரும் Mary Boyert என்பவருக்கும், நியூ யார்க் பெருமறைமாவட்டத்தில் வாழ்வுக்கு ஆதரவான அவையில் பணியாற்றும் மருத்துவர் Michael Bresci அவர்களுக்கும், Colorado Springs மறைமாவட்டத்தின் வாழ்வுக்கு ஆதரவான அவையின் இயக்குனராகச் செயலாற்றிய, காலம் சென்ற அருள்பணி William Carmody அவர்களுக்கும் இவ்வாண்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதைப் பெற்றுள்ள Mary Boyert என்பவர், 35 வருடங்களுக்கு மேலாக, வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துன்புறும் மக்களிடையே சிறப்புப் பணியாற்றியுள்ளார். அதேவேளை, மருத்துவர் Michael Brescia என்பவர், இறக்கும் தறுவாயில் உள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் வழங்கும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நாட்டின் மூன்று இடங்களில் கல்வாரி என்ற பெயரில் மருத்துவமனைகளை உருவாக்கவும் உதவியுள்ளார். 

காலம் சென்ற அருள்பணி William Carmody என்பவரோ, கருக்கலைத்தலின் பாதிப்புக்களால் அவதியுற்ற குடும்பங்களுக்கு உதவிகளை ஆற்றிவந்துள்ளார்.

வாழ்வுக்கு ஆதரவாக செயல்பட்டதற்கென அமெரிக்க ஆயர்களின் விருது இம்மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.