2016-08-09 15:46:00

Earl புயலில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


ஆக.09,2016. “பூர்வீகஇன மக்கள், மதிப்புடன் நடத்தப்படுவதற்கு விண்ணப்பிப்போம், ஏனெனில், இவர்களின் தனித்துவமும், உயிர்வாழ்வுமே அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்ற செய்தியை இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தென் அமெரிக்காவில் Earl புயலுக்குப் பலியாகியுள்ள மக்களுக்குத் தனது செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Earl புயலால், தொமினிக்கன் குடியரசு மற்றும் மெக்சிகோவில் ஐந்து கோடி டாலருக்கு அதிகமான மதிப்புடைய பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் மக்கள் பலரும் பலியாகியுள்ளனர். தொமினிக்கன் குடியரசில் 13 பேரும், மெக்சிகோவில் குறைந்தது 45 பேரும் இறந்துள்ளனர்.

திருத்தந்தையின் செபங்களையும், ஆறுதலையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், மெக்சிகோ ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ளார்.

பெருமளவில் பொருள் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ மக்களுடன், திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வும், இத்தந்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.