2016-08-05 14:36:00

இது இரக்கத்தின் காலம்...: எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்றது


பல நூல்களையும் கற்ற அறிஞர் ஒருவர் இருந்தார். தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. ஒரு முறை, மடத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தடைப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக்குச்சியால் அதை ஏற்றினாள். அறிஞருக்கு அந்தக் குழந்தை வழியாக தனது அறிவுத் திறமையைக் காட்ட ஆசை வந்தது. அந்தக் குழந்தையை அழைத்து, ''பாப்பா, இங்கு இருட்டாக இருந்தது. நீ மெழுகுவர்த்தியை எற்றினாய். உடனே வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது?'' என்று கேட்டார். அந்த குழந்தை உடனே தனது வாயினால் ஊதி மெழுகு வர்த்தியை அணைத்தது. பின் அவரிடம் கேட்டது, ''சிறிது நேரம் முன் வெளிச்சம் இருந்தது, மெழுகுவர்த்தியை அணைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது?'' என்று.

அந்த அறிஞர் திணறி விட்டார். அப்போதுதான், தனக்கு எல்லாமே தெரியும் என நினைத்தது தவறு என்பதை உணர்ந்தார். அவருக்கு ஞானம் பிறந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.