2016-08-04 15:50:00

'கடலில் நிகழும் மரணங்கள் போதும்' - Astalli மையம்


ஆக.04,2016. கடந்த பத்து நாட்களில், லிபியா கடற்கரையோரப் பகுதிகளில், 120 புலம்பெயர்ந்தோரின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதென அனைத்துலக குடிபெயர்வு அமைப்பு - International Organization for Migration (IOM) - கூறியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் பணிக்கென உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalli மையம், IOM வெளியிட்ட புள்ளிவிவரங்களை இணைத்து, 'கடலில் நிகழும் மரணங்கள் போதும்' என்ற தலைப்பில் அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று வெளியிட்டது.

2016ம் ஆண்டு, இதுவரை, 4027 பேர், மத்தியத் தரைக்கடலில் இறந்துள்ளனர் என்றும், 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை, 35 விழுக்காடு கூடுதல் என்றும் IOM வெளியிட்டுள்ள விவரங்கள் கூறுகின்றன.

புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள Astalli மையம், இப்பிரச்சனைக்கு, சட்டப்பூர்வமான, நீதியான முடிவுகளை எடுப்பது, ஐரோப்பிய நாடுகளின் தலையாயக் கடமை என்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.