2016-07-26 16:31:00

தீவிரவாதம் எனும் அழிவு அலைகளைச் சந்தித்து வருகிறது எகிப்து


ஜூலை,26,2016. எகிப்தின் கிறிஸ்தவ சமூகம் அண்மைக் காலங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், இங்கிலாந்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆயர் Angaelos.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, வெளிநாட்டு முதலீடு இழப்பு, சுற்றுலாத்துறை பாதிப்பு, என பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ள எகிப்து நாடு, தற்போது தீவிரவாதம் எனும் அழிவு அலையைச் சந்தித்து வருகிறது என்றார் ஆயர் Angaelos.

காப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவில்லையெனில், அது வேகமாக பரவும் ஆபத்து உள்ளது என்ற கவலையையும் வெளியிட்ட ஆயர்,  புதிய கோவில்கள் குறித்த பொய்க் குற்றச்சாட்டுகள், தவறான வதந்திகள் போன்றவை வழியே, அதிக அளவிலான தாக்குதல்கள் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்படுதல், கோவில்கள் சேதமாக்கப்படல் என, எகிப்து கிறிஸ்தவ சமூகத்தின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் தொடர்வதாக, மேலும் கூறினார், காப்டிக் கிறிஸ்தவ சபை ஆயர் Angaelos. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.