2016-07-21 15:42:00

போலந்து கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளி விவரங்கள்


ஜூலை,21,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போலந்து நாட்டிற்கு ஜூலை 27ம் தேதி முதல் 31ம் தேதி முடிய மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தையொட்டி, அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

323,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட போலந்து நாட்டின் மக்கள் தொகை, 37,507,000. இவர்களில், 36,607,000 பேர் கத்தோலிக்கர்கள். அதாவது, அந்நாட்டின் 97.6 விழுக்காட்டினர் கத்தோலிக்க மறையைத் தழுவியவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

10,379 பங்குத்தளங்களைக் கொண்ட இந்த நாட்டில், 156 ஆயர்கள், 30,661 அருள் பணியாளர்கள், 21,174 இருபால் துறவியர், மற்றும், 14,154 மறைக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்றும், 3,513 இளையோர், அருள் பணியாளர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தலத்திருஅவை நடத்திவரும் 1425 கல்விக் கூடங்களில், 213,940 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றும், 337 மருத்துவமனைகள், 214 முதியோர் இல்லங்கள் மற்றும் 383 அனாதை இல்லங்கள் உட்பட, 3129 பிறரன்பு மையங்கள் வழியே கத்தோலிக்கத் திருஅவை பணியாற்றி வருகின்றது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.