2016-07-16 15:44:00

வீட்டுப் பணியாளர்க்கு உரிமைகள் வழங்கும் முதல் வளைகுடா நாடு


ஜூலை,16,2016. தனது நாட்டில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வீட்டுப் பணியாளர்களுக்கு, குறைந்த ஊதிய வரம்பை நிர்ணயித்து, விதிமுறையை அமைத்துள்ள முதல் வளைகுடா நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது குவைத்.

குவைத்திலுள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்களில் ஆசியர்களே அதிகமாகவுள்ளவேளை, அந்நாடு உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைப் பரவலாகச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், ஊதியம், வேலை செய்யும் நேரம், விடுமுறை, பணியை நிறைவு செய்யும்போது சலுகைகள் உட்பட, தொழில் விதிமுறைகளை அமைத்துள்ளார் குவைத் உள்துறை அமைச்சர் Sheikh Mohammad Khaled Al-Sabah.

குறைந்த மாத ஊதியம் அறுபது தினார்கள், ஊதியத்தோடு ஆண்டுக்கு முப்பது நாள்கள் விடுமுறை, 12 மணி நேரம் வேலை, அதிகப்படியான நேரம் வேலைசெய்பவர்க்கு மேலும் ஊதியம் போன்ற உரிமைகளைக்கொண்ட விதிமுறையை அமைத்துள்ள குவைத் நாட்டை பாராட்டியுள்ள மனித உரிமைகள் வாட்ச் (HRW) என்ற அமைப்பு, பிற வளைகுடா நாடுகளும் குவைத்தைப் பின்பற்றுமாறு கேட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில், வீட்டுவேலை செய்யும் 24 இலட்சம் பணிப்பெண்களில் ஆறு இலட்சம் பேர், குவைத்தில் பணியாற்றுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.