2016-07-14 16:02:00

"எருசலேம் பதக்கம்" பெற்ற முதுபெரும் தந்தை Twal


ஜூலை,14,2016. எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றிருக்கும் Fouad Twal அவர்களுக்கு, பாலஸ்தீன அரசுத் தலைவர், Abu Mazen அவர்கள், "எருசலேம் பதக்கம்" என்ற உயரிய விருதை, ஜூலை 12, இச்செவ்வாயன்று வழங்கினார் என்று பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பாலஸ்தீன கத்தோலிக்கத் திருஅவைக்கும், பொதுவாக, பாலஸ்தீன மக்களுக்கும் முதுபெரும் தந்தை Twal அவர்கள் ஆற்றிய தலைசிறந்த பணிகளுக்கு நன்றியாக இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது என்று அரசுத் தலைவர், Abu Mazen அவர்கள் கூறினார்.

பாலஸ்தீன நாட்டின் Ramallah நகரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், எருசலேம் மறைமாவட்ட அதிகாரிகளும், பாலஸ்தீன அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புனித பூமி பாதுகாவலராகப் பணியாற்றி வந்த, பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Pierbattista Pizzaballa அவர்கள், முதுபெரும் தந்தை Twal அவர்களுக்குப் பதிலாக, எருசலேம் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.