2016-07-11 16:02:00

தென் சூடானில் அமைதி வேண்டி ஐ.நா. விண்ணப்பம்


ஜூலை,11,2016. தென் சூடானில் இடம்பெறும் கடும் மோதலுக்கும், அங்கு ஐ.நா. அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு அவை,  மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் மோதலை நிறுத்தி, வன்முறை பரவுவதைத் தடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் தென் சூடானில் இடம்பெற்று வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு மேலும் கூடுதல் எண்ணிக்கையில், ஐநா அமைதிப் படைகளை நிறுத்துமாறும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தென் சூடான் அதிபர் சல்வார் கீர் மற்றும் துணை அதிபர் ரியெக் மச்சாரின் பாதுகாவலர்களுக்கிடையே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டை மோதல்களில், குறைந்தது, 150 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த இரு தலைவர்களும் அதே நாளில் அதிபர் மாளிகையில் சந்தித்து அமைதியை நிலைநாட்டுமாறு கோரியதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.