2016-07-09 13:11:00

இது இரக்கத்தின் காலம் - கள்வர்களால் காயப்பட்ட சமாரியர்


ஆஸ்திரேலிய கவிஞர் Henry Lawson என்பவர், ‘நல்ல சமாரியர் உவமை’யை, கவிதையாக வடித்துள்ளார். அந்தக் கவிதையில், சமாரியரை, ஒரு முட்டாள் எனக் கூறுகிறார் அவர்:

அவர் ஒரு முட்டாள்.

அவர் நினைத்திருந்தால், செல்வம் குவித்திருக்கலாம்

ஆனால், தேவையில் உள்ள அடுத்தவரை

கடந்து செல்ல இயலாதவர் அவர்.

அவரைக் கண்ட மற்ற வர்த்தகர்கள்

அவர் மென்மையானவர் என்று கேலி செய்தனர்

வர்த்தக உலகில் இந்த சமாரியர்

அடிக்கடி கள்வர்களால் காயப்பட்டார்.

இரக்கத்தின் காலத்தில் பயணிக்கும் நாம், தேவையில் உள்ள அடுத்தவரைக் கடந்து செல்ல இயலாதவர்களாக மாறுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.