2016-07-08 15:29:00

உலக இளையோர் தினத்திற்குப் புறப்படும் இந்திய இளையோர்


ஜூலை,08,2016. இந்தியாவிலிருந்து ஏறக்குறைய 150 இளம் கத்தோலிக்கர், கிராக்கோவ் உலக இளையோர் தினத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்று, UCA செய்தி நிறுவனம் கூறியது.                          

இந்திய இளையோரின் இப்பயணம் பற்றிக் கூறிய Shradha Kujur அவர்கள், இந்த உலக இளையோர் தினம் தொடங்குவதற்கு முன்னர் நடைபெறும் ஐந்து நாள் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்த அறிவை விரிவாக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் ஏற்பாட்டால் கிராக்கோவ் செல்லும் குழுவில், நூறு இளையோர், ஐம்பது ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஓர் ஆயர் என, 151 பேர் உள்ளனர்.

போலந்து செல்லும் இந்திய இளையோர், இந்த விழா நாள்களில், கிராக்கோவ் நகர் குடும்பங்களில் விருந்தினர்களாகத் தங்குவார்கள் என்றும், அந்நாள்களில் இந்தியக் கிறிஸ்தவப் பண்பை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள் என்றும் Kujur கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1985ம் ஆண்டில் உலக இளையோர் தினம் உருவாக்கப்பட்டது. 

ஆதாரம் : UCAN      /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.