2016-07-08 15:24:00

உலக இளையோர் தினத்திற்கு ஆன்மீகத் தயாரிப்பு


ஜூலை,08,2016. உலக இளையோர் தினம் அண்மித்துவரும்வேளை, இந்த நிகழ்வுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆன்மீக மற்றும் பிற தயாரிப்பு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர் தலத்திருஅவை அதிகாரிகள்.

போலந்து நாட்டின் கிராக்கோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Frank J. Caggiano அவர்கள், அந்நாட்டிலிருந்து ஏறத்தாழ முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட இளையோர் இதில் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்தார்.

இதில் கலந்துகொள்ளும் இளையோர், தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கும், அவரின் கொடைகளைப் பெறுவதற்கும், அவருக்குத் திறந்தமனம் உள்ளவர்களாக இருப்பதற்கும், செபத்தில் அதிகமாகத் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார் ஆயர் Caggiano.

கிராக்கோவில் இம்மாதம் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை 31வது உலக இளையோர் தினம் நடைபெறவிருக்கின்றது. இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார்கள்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.