2016-07-06 16:31:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இலங்கை முயற்சிகள்


ஜூலை,06,2016. நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பங்குத்தளங்களில் நடைபெறும் விழாக்களுக்கு அதிகம் செலவழிக்காமல், அந்தத் தொகையைக் கொண்டு வறியோருக்கு உதவிகள் செய்யவேண்டும் என்று, இலங்கை ஆயர் ஒருவர் தன் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chilaw மறைமாவட்ட ஆயர், வலன்ஸ் மெண்டிஸ் (Valance Mendis) அவர்களின் வேண்டுகோளின்படி, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், Nachchikalliya, Kalpitiya ஆகிய இடங்களில் வறியோருக்கு 50 வீடுகள் கட்டித் தரப்படுகின்றன என்று Chilaw மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர், Prasad Chaminda Fernando அவர்கள், UCAN செய்தியிடம் கூறியுள்ளார்.

Chilaw மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருள் சகோதரிகள், இரக்கத்தின் யூபிலி ஆண்டின் சிறப்பு முயற்சியாக, மது  பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோர் மத்தியில், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, குருநகலா ஆகிய மறை மாவட்டங்களிலும் வறியோரை மையப்படுத்தி பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று UCAN செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.