2016-07-05 16:47:00

உத்தரகாண்ட் மாநிலத்தில் காரித்தாஸ் நிவாரணப் பணிகள்


ஜூலை,05,2016. வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்திய காரித்தாஸ் நிறுவனம் இடர்துடைப்புப் பணிகளை ஆற்றி வருகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உணவு, உடை மற்றும் நலவாழ்வு உதவிகளை ஆற்றி வருவதாக, இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி பிரட்ரிக் டி சூசா அவர்கள் தெரிவித்தார்.

கத்தோலிக்கப் பள்ளிகள், தற்காலிகக் குடிசைகள் போன்றவற்றில் மக்களைத் தங்க வைத்துள்ளதாகவும் கூறினார் அருள்பணி பிரட்ரிக் டி சூசா.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை, நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது எனவும், கடும் நிலச்சரிவுகளால், சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நிலச்சரிவுகள் மேலும் இடம்பெறவிருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.