2016-07-02 15:28:00

மெக்சிகோ குழந்தைப்பருவத்தின் பாதுகாவலர்கள்


ஜூலை,02,2016. மெக்சிகோ நாட்டின் Tlaxcala சிறார் அருளாளர் மறைசாட்சிகள், அந்நாட்டு குழந்தைப்பருவத்தின் பாதுகாவலர்கள் என அறிவிக்கப்படுவதை திருப்பீடம் அங்கீகரித்துள்ளது என்று, அந்நாட்டுப் பேராயர் Francisco Moreno Barron அவர்கள் தெரிவித்தார்.

இது குறித்து, Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய Tijuana பேராயர் Moreno Barron அவர்கள், திருப்பீட திருவழிபாட்டுப் பேராயம் இந்த ஒப்புதலுக்கான ஆவனத்தைக் கொடுத்துள்ளது எனக் கூறினார்.

மெக்சிகோவை இஸ்பானியர்கள் கைப்பற்றிய பின்னர், அப்பகுதியின் கிறிஸ்டோபல், அந்தோணியோ, ஹூவான் ஆகிய மூவருக்கும், முதலில் பிரான்சிஸ்கன் சபையினர், பின்னர் தொமினிக்கன் சபையினர் நற்செய்தியை அறிவித்தனர் எனவும்,  இம்மூவரும், தங்களின் சொந்த மக்களால் கொடூரமாய்க் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்தார் பேராயர் Moreno Barron. இவர்கள் சிலைகளை வழிபடவும், பலதாரத் திருமணத்தையும் மறுத்ததால் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்றார் பேராயர்.

கிறிஸ்டோபல் 1527ம் ஆண்டும், அந்தோணியோ மற்றும் ஹூவான் 1529ம் ஆண்டும் இறந்தனர். இவர்களை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1990ம் ஆண்டு மே 6ம் தேதி அருளாளர்களாக அறிவித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.