2016-07-01 15:54:00

குடியேற்றதாரர் நெருக்கடியைக் களைய உலகிற்கு அழைப்பு


ஜூலை,01,2016. குடியேற்றதாரர் பிரச்சனை, அரசியல் விவகாரமல்ல, ஆனால், இது மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்த விவகாரம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் ஒருவர் கூறினார்.

குடியேற்றதாரர் பிரச்சனைக்கு உலக அளவில் தீர்வு காணப்படுமாறு வலியுறுத்தியுள்ள Los Angeles பேராயர் José Gomez அவர்கள், சட்டத்துக்குப் புறம்பே குடியேறியிருப்பவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டத்தை நிறுத்த வேண்டுமென அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியேற்றதாரர் நெருக்கடி, மனிதாபிமானப் பெருந்துன்பம் என்றும், அமெரிக்க ஐக்கிய நாடு, இப்பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து தோல்வியையே எதிர்கொண்டு வருகின்றது என்றும் கூறியுள்ள பேராயர் Gomez அவர்கள், இவ்விவகாரத்தில், நன்னெறி மற்றும் அரசியல் தலைமைத்துவத்தில் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

ஒபாமா அவர்களின் குடியேற்றதாரர் திட்டம் கைவிடப்படுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் José Gomez.

Los Angeles உயர்மறைமாவட்டத்தில், இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த குடியேற்றதாரர் அதிகளவில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.