2016-06-23 15:42:00

ரியோ ஒலிம்பிக்கில் மனித வர்த்தகத்தைத் தடை செய்ய UISG


ஜூன்,23,2016. பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவில் 2016ம் ஆண்டின் கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளது UISG என்ற அனைத்துலக பெண் துறவு சபைகள் தலைவர்கள் நிறுவனம்.

விளையாட்டு நிகழ்வுகளின்போது, மனித வர்த்தகம், அதிகமாக இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டி, “வாழ்வுக்காக விளையாட்டு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளது UISG நிறுவனம்.

ரியோவில் 2014ம் ஆண்டு நடந்த உலக கால்பந்து கோப்பை விளையாட்டின்போதும் UISG நிறுவனம், இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது.

உலகில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் மனித வர்த்தகத்திற்குப் பலியாகி வருகின்றனர்.

ரியோ ஒலிம்பிக், வருகிற ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.

மனித வர்த்தகத்தில் 79 விழுக்காடு பாலியல் பயன்பாடு என்றும், உலகளவில் மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் சிறார் என்றும், மனித வர்த்தகம் பற்றிய உலகளாவிய ஓர் அறிக்கை கூறுகிறது.

                                                    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.