2016-06-23 15:08:00

திருத்தந்தை : நிறைய நல்ல காரியங்களை ஆற்றுகின்றீர்கள்


ஜூன்,23,2016. நீங்கள் நிறைய நல்ல காரியங்களை ஆற்றுகின்றீர்கள் என்று, இவ்வியாழன் காலையில், திருப்பீடத்தில் தான் சந்தித்த, Knights of Malta கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Matthew Festing அவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனர் அந்த்ரேயா ரிக்கார்தி, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் José Graziano da Silva ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்து அவர்களின் பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார் திருத்தந்தை.

இன்னும், திருப்பீடத்திற்கான கியூபா நாட்டுப் புதிய தூதர் Jorge Quesada Concepción, திருப்பீடத்திற்கான பிரான்ஸ் நாட்டுப் புதிய தூதர் Philippe Zeller, திருப்பீடத்திற்கான போலந்து நாட்டுப் புதிய தூதர் Janusz Kotaaski ஆகியோரையும் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களையும் பெற்றார் திருத்தந்தை.

தனது பணியை நிறைவு செய்யும், திருப்பீடத்திற்கான பிரிட்டன் தூதர் Nigel Marcus Baker அவர்களையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

120 நாடுகளில் பணியாற்றும் Knights of Malta கத்தோலிக்க அமைப்பு, மருத்துவமனைகள், வயது முதிர்ந்தோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் என நலவாழ்வு மற்றும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.