2016-06-17 15:59:00

இது இரக்கத்தின் காலம் : எதிராளிகளின் கருத்துக்கும் மதிப்பு


மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மாஸ்கோ சென்றிருந்தார். அவர், கம்யூனிச எதிர்ப்பாளர். இரஷ்ய அதிபராக இருந்த பிரஷ்னேவுக்கும், தேசாய்க்கும் இடையே விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை. ''நான் மகிழ்ச்சியான நேரங்களில் விருந்தினருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவேன். ஆனால், உங்களுடன் தேநீர் மட்டும்தான் குடிக்கலாமெனத் தோன்றுகிறது'' என்றார் பிரஷ்னேவ். அதற்கு, ''நான் தேநீர் குடிப்பதை விட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன'' என்றார் தேசாய். பிரஷ்னேவ் விடவில்லை. ''சரி, நாம் சாப்பிடலாம். நான் அசைவம், நீங்கள்?'' என்று கேட்டார். '' நான் சைவம். அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகிறீர்கள் என்றுதான் எனக்குத் தெரியவில்லை'' என்றார் தேசாய், கிண்டலாக. பிரஷ்னேவுக்கு கடுங்கோபம் வந்தாலும், தேசாயின் மதிநுட்பத்தை ஆச்சரியத்துடன் இரசித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.