2016-06-16 17:05:00

ஜோர்டான் அரசி, காரித்தாசின் உணவு மையத்தைப் பார்வையிட்டார்


ஜூன்,16,2016. ஜோர்டானின் Jabal al Weibdehல், கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் நடத்தும் உணவகம் மற்றும் பிற உதவி மையங்களைப் பார்வையிட்டுள்ளார் ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லாவின் மனைவி அரசி Rania.

காரித்தாஸ் நிறுவனம் நடத்தும் இரக்கத்தின் உணவகத்தைப் பார்வையிட்ட ஜோர்டன் அரசி, சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களுக்கு காரித்தாஸ் ஆற்றிவரும் உதவிகளைப் பாராட்டினார்.

ஜோர்டான் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத்தின் பணிகளைப் பார்வையிட்ட அரசி, மங்களவார்த்தை கத்தோலிக்க ஆலயம் சென்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் பிரதிநிதியாக இருக்கும், பேராயர் Maroun Lahham அவர்களையும் சந்தித்தார்.

காரித்தாசின் இரக்கத்தின் உணவகம், கடந்த கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் தேவையில் இருக்கும் ஏறத்தாழ 500 பேருக்கு, சூடாக உணவு வழங்கப்படுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.