2016-06-16 15:43:00

இது இரக்கத்தின் காலம் : மகிழ்ச்சியான மனிதர்


அரசர் ஒருவர் கடின நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். அந்நாட்டிலுள்ள மருத்துவர்கள் எவராலும் அரசருக்குக் குணமளிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு புனித மனிதரை அரசரிடம் அழைத்து வந்தனர். அவரிடம் அரசர், ஐயா, நான் இப்போது சாவதற்கு விரும்பவில்லை. இன்னும் நீண்ட நாள்கள் வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு உதவ முடியுமா? எனக் கேட்டார். அப்போது அந்த புனித மனிதர், இது வெகு எளிது. அரசே, உங்கள் நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரின் சட்டையை நீங்கள் உங்கள் உடலில் போட்டுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான் என்றார். அரசரும் பணியாட்களுக்குக் கட்டளையிட்டார். உடனடியாக, அவர்கள் நாடெங்கும் சென்றனர். கடைசியாக, மிகவும் கஷ்டப்பட்டு, ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில், ஒருவரைக் கண்டுபிடித்தனர். ஆனால், பணியாட்களால் அந்தப் புனித மனிதர் சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதரிடம் சட்டையே இல்லை.

ஆம். உலகப் பொருள்கள் மட்டும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது. எவ்வளவுக்குப் பொருள்கள் சேர்கின்றனவோ அவ்வளவுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.