2016-06-15 17:10:00

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கோள் கண்டுபிடிப்பு


ஜூன்,15,2016. பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கோள் ஒன்றை, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா ஆய்வு மைய அறிவியலாளர்கள் புதிதாகக் கண்டுபிடித்து, அதற்கு கெப்ளர்-1647 பி (Kepler-1647 B) எனப் பெயரிட்டுள்ளனர்.

கெப்ளர்-1647 பி கோள், ஜூப்பிட்டர் கோள் அளவில் உள்ளது எனவும், அதன் 2 விண்மீன்களை 1,107 நாள்களில்(ஏறத்தாழ மூன்று ஆண்டுகள்) சுற்றி வருவதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 440 கோடி ஆண்டுகள் வயதுடைய இந்தக் கோள், ஏறக்குறைய பூமியைப் போன்ற வயதுடையது என்றும், 2005ம் ஆண்டுக்குப் பின்னர் இத்தகைய கண்டுபிடிப்பில் இது 11வது என்றும் கூறப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 3,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த அமைப்பிலுள்ள ஒரு விண்மீன் சூரியனைவிட சற்று பெரியது. மற்றது சற்று சிறியது எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம், கிரீன்பெல்ட் பகுதியில் உள்ள நாசாவின் கொட்டார்டு ஸ்பேஸ் பிளைட் சென்ட்டர் மற்றும் San Diego மாநில பல்கலைக்கழக வானியல் அறிவியலாளர்கள், கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் இப்புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளனர்.

பால்வெளி மண்டலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள விண்மீன்கள் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கோளுக்கு கெப்ளர்-1647பி என பெயரிட்டுள்ளனர். இந்தப் பிரபஞ்சத்திலேயே இதுதான் மிகப்பெரிய கோளாக இருக்கும் என கருதுகின்றனர். இப்போதுவரை வியாழன் கோள்தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள 2 சூரியன்களைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Reuters / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.