2016-06-15 16:58:00

தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூன்,15,2016. தமிழகத்தில் 1951ம் ஆண்டில் 4.7 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

இந்தியாவிலுள்ள மொத்த கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் தமிழகத்தில்  உள்ளனர் என்றும், 2011ம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் 44 இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள், இது அம்மாநிலத்தின் 7 கோடியே 21 இலட்சத்து 20 ஆயிரம் மக்களில் 6.12 விழுக்காடு என்றும் கொள்கை ஆய்வு மையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் 61 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்றும், இந்தியாவிலுள்ள 2 கோடியே 80 இலட்சம் மொத்த கிறிஸ்தவர்களில் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு மையத்தின் புள்ளி விபரம் கூறுகிறது.

சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஊட்டி, கோயம்புத்தூர், சிவகங்கை, தமிழகத்தில், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : swarajyamag / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.