2016-06-14 16:53:00

இந்தியத் துறவிகள் யூபிலி ஆண்டில் இரக்கத்தின் 40 பணிகள்


ஜூன்,14,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், செபம் செய்தல் அல்லது கருத்தரங்கில் கலந்துகொள்தல் போன்றவற்றில் மட்டும் நின்றுவிடாமல், ஏழைகள் மற்றும் துன்புறும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டில் இந்தியத் துறவறத்தாரின் பணிகள் பற்றி பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, இந்திய துறவு சபைகளின் தேசியச் செயலர் அருள்பணி ஜோ மன்னத் அவர்கள், இந்தியத் துறவு சபைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களைப் பரிந்துரை செய்து, அவற்றை, யூபிலி ஆண்டு முடிந்த பின்னரும் செயல்படுத்த உறுதி எடுத்துள்ளன என்று கூறினார்.

திருத்தந்தையின் அழைப்பிற்கிணங்கி, பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த நாற்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களும், சொந்த வாழ்விலும், ஐரோப்பிய ஒன்றிய அளவிலும் செயல்படுத்த தீர்மானித்துள்ளனர் துறவிகள்.

மன்னிப்பு, ஒப்புரவு, இரத்த தானம், உறுப்பு தானம், நோயாளர் சந்திப்பு, வயது முதிர்ந்தோர், கைதிகள் சந்திப்பு போன்ற பல திட்டங்கள் இதில் உள்ளன.

ஜூன் 14, உலக இரத்த தான நாளாகும்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.