2016-06-13 16:44:00

பசிப் பிரச்சனை, ஓர் ஆழமான ஆன்மீகச் சவால்


ஜூன்,13,2016. உலகில் பசியை முழுவதுமாக ஒழிப்பது குறித்து, உரோமிலுள்ள ஐ.நா.வின் WFP உலக உணவு திட்ட அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல, தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும், பசி, முக்கிய பிரச்சனையாக உள்ளது என்றார்.

பசிப் பிரச்சனை, ஓர் ஆழமான ஆன்மீகச் சவால் எனவும், இது, வெறும் நிதி, வேளாண்மை அல்லது சமூகக் கூறுகளை மட்டும் சார்ந்தது அல்ல, ஆனால், வெறுமை மற்றும் அதிகப்படியாகக் கொண்டிருத்தல் சார்ந்த விவகாரமாகும், எனினும், நம் பார்வையும், பகுத்தறிதலும், நம் பேராசை மற்றும் உணர்வற்றதன்மையால், கறைபடிந்து, உணர்ச்சியற்று மாறியுள்ளன எனவும் பேசினார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு. 

நம் உலகில், நம் நாட்டில், நம் சுற்றுப்புறத்தில், ஒரு மனிதர் பசியாக இருக்கும்போது, நம் இதயத்தில் வெறுமை பரவியிருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும் என்றும் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.