2016-06-13 16:35:00

நீர்நிலைகளைக் காக்க சமூக ஆர்வலர்களின் புதிய யுக்தி


ஜூன்,13,2016. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க சில சமூக ஆர்வலர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை போன்ற நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் மக்களின் நேரடிப் பயன்பாட்டில் இல்லை என்றும், கண்காணிப்பு இல்லாத இப்பகுதிகளில் சட்ட விரோத மண் திருட்டு, நீர் திருட்டு போன்ற இயற்கை அழிவுகள் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலமாக, அவற்றைத் தீவிர கண்காணிப்பில் வைக்க முடியும் என்பதே அவர்களது நம்பிக்கை. இந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் சமுக ஆர்வலர்களில் ஒருவரான புவியல் வல்லுநர் குமரன் என்பவர், பொது மக்களுக்கு நீர் விளையாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறார். நீர்நிலைகளை மாசுப்படுத்தாத விளையாட்டுக்களை மட்டுமே தேர்வு செய்து பயிற்சி அளித்து வருவதாக பிபிசி தமிழோசையிடம் குமரன் கூறினார்.

மேலும், இது போன்ற நடவடிக்கைகள், நீர்நிலைகளைப் பாதுக்காக்க அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் குமரன் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.