2016-06-07 16:04:00

தலாக் விவாகரத்து பழக்கத்தை இரத்து செய்ய BMMA முயற்சி


ஜூன்,07,2016. முஸ்லிம் கணவன்மார், தலாக் என மூன்று முறை கூறி மனைவிகளை விவாகரத்து செய்யும் பழக்கத்தை இரத்து செய்வதற்கு ஆதரவளிக்குமாறு, Bharatiya Muslim Mahila Andolan(BMMA) பெண்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூன்று முறை சொல்லும் talaq மற்றும் "nikah halala" பழக்கத்தை நிறுத்துவதற்கு, இஸ்லாமியரின் நோன்பு மற்றும் செப மாதமாகிய இரமதான் புனித மாதத்தில் முயற்சித்து வருகிறது BMMA பெண்கள் அமைப்பு.

முஸ்லிம் சமூகம், தங்கள் சகோதரிகளின் நல்வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில், இந்தப் பழக்கத்தை இரத்து செய்வதை ஆதரிப்பதற்கு, இந்தப் புனித மாதத்தில் உதவுமாறு கேட்டுள்ளது  BMMA அமைப்பு.

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மூன்று முறை talaq சொல்லப்படும் இந்தப் பழக்கத்தினால் துன்புறும் முஸ்லிம் பெண்கள் பற்றி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணின் கதையை வெளியிடுவதற்கும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த இஸ்லாமியச் சட்ட விவகாரத்தில், அரசு தலையிட்டு பெண்களுக்கு உதவுமாறு, ஏறத்தாழ 89 விழுக்காட்டு முஸ்லிம் பெண்கள் விரும்புவதாக, ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : IANS / Dnindia /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.