2016-06-07 16:07:00

ஏழைகளின் பசியைப் போக்கும் கேரளப் பெண்


ஜூன்,07,2016. இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 33 விழுக்காட்டு உணவு பொருள்கள், யாருக்கும் பயன் இல்லாமல் குப்பையில் கொட்டப்படும்வேளை, உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கேரளாவின் கொச்சியில் உணவகம் நடத்திவரும் மினு பவுலின் என்ற பெண். புதுமையான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

அதற்காக அவர் தனது உணவக வாசலில் குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத ஐம்பது பேருக்கு, தினமும் உணவுகளை வைக்கிறார். இதற்கு நன்ம மரம் என்று பெயரும் வைத்துள்ளார். 24 மணி நேரமும் இந்த குளிர்சாதனப் பெட்டியில் உணவு இருக்கும். எந்த நேரமும், மற்ற வேறு யாரும் உணவு வைக்கலாம். இவ்வாறு வைக்கப்படும் உணவுகளை பசியில் வாடும் யாரும் எடுத்து உண்ணலாம்.

இது தொடர்பாக பேசிய மினு பவுலின் அவர்கள், வயதான பலர், வீடில்லாமல், உணவுக்காகக் குப்பைகளில் தேடுவதைப் பார்த்தேன். பசியைப் போக்க பலர் வழியில்லாமல் தவிப்பது, என்னைப் பாதித்தது. இதற்காக, தனது 'பப்படவட' உணவகத்தில், நன்ம மரம் என்ற உணவு வங்கியைத் துவக்கியதாகக் கூறினார். 

ஆதாரம் : தினகரன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.