2016-06-06 16:52:00

உலகில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள்


ஜூன்,06,2016. Transparency International என்ற பன்னாட்டு ஒளிவுமறைவற்றதன்மை என்ற நிறுவனம், ஊழல் குறித்து 168 நாடுகளில் நடத்திய ஆய்வில், 100 நாடுகள் ஊழல் மலிந்துள்ள நாடுகளாகப் பட்டியலிட்டுள்ளது

ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு ஆய்வு நடத்தும் இந்நிறுவனம், இவ்வாண்டு நடத்திய ஆய்வில், உலகில் மிக அதிகமாக ஊழல் மலிந்துள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது மெக்சிகோ என்றும், ஊழலே இல்லாத நாடு அயர்லாந்து என்றும் தெரியவந்ள்ளது.

மொத்தமாக 75 புள்ளிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து, உலகில் மிக அரிதாக ஊழல் நடைபெறும் நாடு எனத் தெரிய வந்துள்ளது. இதன் அடுத்த இடத்தில் இருக்கும் நாடு ஜப்பான்.

பன்னாட்டுக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு இங்கு ஆட்சி நடைபெறுவதாலும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே இங்குள்ள பெரிய நிறுவனங்களில் முதன்மை அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாலும் ஊழலுக்கு இடமில்லை எனக் கூறப்படுகின்றது.

அடுத்த இடத்தில் இருக்கும் சிலே நாடு, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக அரிதாக ஊழல் நடைபெறும் நாடாகப் பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ள எஸ்டோனியா நாடு அடுத்த இடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் ஊழல் மிக அரிதாக உள்ள நாடுகளில் பிரான்ஸ் 14-வது இடத்திலும், போர்த்துக்கல் 13வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து போலந்து, இஸ்ரேல், சுலேவேனியா, இஸ்பெயின் உள்ளன. செக் குடியரசு 8-வது இடத்திலும், இதற்கு அடுத்த இடத்தில் தென் கொரியாவும், இத்தாலி 3-வது இடத்திலும், துருக்கி மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டு நாடுகளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்வதில் முதல் இரண்டு இடங்களையும் தக்கவைத்துள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.