2016-06-03 15:42:00

மீனின் இயல்பையே மாற்றும் பிளாஸ்டி துகள்களால் அச்சுறுத்தல்


ஜூன்,03,2016. கடலில் அதிக அளவு சிறிய பிளாஸ்டிக் துகள்கள் குவிந்து கிடப்பது, கடலிலுள்ள இளம் மீன்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவை தெரிவுச் செய்வதில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தி பேரழிவை விளைவிக்கின்றன என்று சுவீடன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வளர்இளம் பருவத்தினர் நல்ல உணவு இருந்தும் நலமற்ற உணவைத் தெரிவு செய்வதைப் போல, perch மீன் குஞ்சுகள் வழக்கமாக உண்கின்ற சாதாரண மிதவை உயிரினங்களை உண்பதற்குப் பதிலாக சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை விரும்புகின்றன.

இதனால் அவை மெதுவான இயக்கமுடையவையாகி, உருவத்தில் சிறியவையாகி, எளிதில் இரைக்காகத் தாக்குதலுக்கு உள்ளாகும் மீன்களாக மாறிவிடுகின்றன.

கடலிலும், பெருங்கடலிலும் இறுதியாக வந்துசேரும் ஒப்பனைப் பொருள்களிலும், சோப்புக்களிலும் கலந்துள்ள நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் வாதத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தமாக எண்பது இலட்சம் டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.