2016-06-03 15:19:00

சமூகத்தில் சிறுபான்மையினரின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்


ஜூன்,03,2016. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில், சிறுபான்மையினரின் பங்கு அதிகரிக்கப்படுவதற்கு உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

OSCE என்ற ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டத்தில், அறிக்கை சமர்ப்பித்த அந்நிறுவனத்தின் திருப்பீட நிரந்தரப் பிரதிநிதி பேரருள்திரு Janusz Urbańczyk அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

வன்முறை எதிர்பாராதவிதமாக இடம்பெறுவதில்லை, இது, ஏளனம் செய்தல், சமூகத்தில் ஒதுக்கப்படுதல் அல்லது மதவெறி காரணமாக ஆரம்பிக்கின்றது என்றும், இது பாகுபாட்டிற்கும் வழியமைக்கின்றது என்றும் கூறினார் பேரருள்திரு Urbańczyk.

இந்தப் போக்குகள், சகிப்பற்றதன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன என்றும் எச்சரித்தார் பேரருள்திரு Urbańczyk.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.