2016-06-03 15:26:00

இது இரக்கத்தின் காலம்...: கழுத்து ஏன் கோணலாக உள்ளது


ஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர். சில நாட்கள் கழித்து அக்பர், தான் கூறியதை மறந்துவிட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை. ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும்போது அக்பர், “ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவலட்சணமாகவும் இருக்கிறதே, ஏன்?” என்று பீர்பாலிடம் கேட்டார். இதுதான் தருணம் என்று எண்ணிய பீர்பால், “அரசே, அவை முற்பிறவியில் யாருக்காவது இலவசமாக கிராமங்களைப் பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக்கும்”என்றார். தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறியதால்தான் தம்மை இப்படி பீர்பால் குத்திக் காட்டுகிறார் என்று புரிந்துகொண்ட அக்பர், உடனே அவர் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்தார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயல்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.