2016-06-03 15:25:00

ஆயர் செபஸ்தியான் : பெரிய மாற்றத்திற்கு நல்ல தொடக்கம்


ஜூன்,03,2016.  மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மாதகாலமாக நடைபெற்ற கும்பமேளா இந்துமத சிறப்பு விழாவில், முன்னாள் தீண்டப்படாதவர்களும், உயர்தரப்பு இந்து மதத்தினரும் ஒன்றாகக் கலந்துகொண்டது, இந்திய சமுதாயம் சிறந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் காட்டுகின்றது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 ம் தேதி, உஜ்ஜெயினில், Kshipra நதிக்கரையில் இந்துமதத் துறவிகள் நீராடத் தொடங்கியதிலிருந்து தொடங்கிய கும்பமேளா விழா, மே 21ம் தேதி, இந்துமதத் துறவிகள் நீராடியதோடு நிறைவடைந்தது. 

இவ்விழா நாள்களில், அரசுடன் சேர்ந்து, நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த உஜ்ஜெயின் மறைமாவட்ட ஆயர் செபஸ்தியான் வடக்கல் அவர்கள் இவ்விழா பற்றிக் கூறியபோது, உயர் வகுப்பினரோடு, முன்னாளில் ஒதுக்கப்பட்டவர்களும் சேர்ந்து நீராடியது, பெரிய மாற்றத்திற்கு நல்ல தொடக்கம் என்றார்.

ஆலயங்கள், சமய நிகழ்வுகள் அல்லது சமயக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை செய்யப்பட்டிருந்த வகுப்பைச் சேர்ந்த 200 பெண்கள், இவ்வாண்டு கும்பமேளா விழாவில் நீராடினர்.

ஜூன்,03,2016.  மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மாதகாலமாக நடைபெற்ற கும்பமேளா இந்துமத சிறப்பு விழாவில், முன்னாள் தீண்டத்தகாதவர்களும், உயர்தரப்பு இந்து மதத்தினரும் ஒன்றாகக் கலந்துகொண்டது, இந்திய சமுதாயம் சிறந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் காட்டுகின்றது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 ம் தேதி, உஜ்ஜய்னில், Kshipra நதிக்கரையில் இந்துமதத் துறவிகள் நீராடத் தொடங்கியதிலிருந்து தொடங்கிய கும்பமேளா விழா, மே 21ம் தேதி, இந்துமதத் துறவிகள் நீராடியதோடு நிறைவடைந்தது. 

இவ்விழா நாள்களில், அரசுடன் சேர்ந்து, நலவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த உஜ்ஜய்ன் மறைமாவட்ட ஆயர் செபஸ்டியான் வடக்கெல் அவர்கள் இவ்விழா பற்றிக் கூறியபோது, உயர் வகுப்பினரோடு, முன்னாளில் ஒதுக்கப்பட்டவர்களும் சேர்ந்து நீராடியது, பெரிய மாற்றத்திற்கு நல்ல தொடக்கம் என்றார்.

ஆலயங்கள், சமய நிகழ்வுகள் அல்லது சமயக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை செய்யப்பட்டிருந்த வகுப்பைச் சேர்ந்த 200 பெண்கள், இவ்வாண்டு கும்பமேளா விழாவில் நீராடினர்.

 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலிஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.