2016-06-02 16:02:00

பொருளாதார வளர்ச்சியும் மக்கள் நலனும் இணைந்து செல்ல வேண்டும்


ஜூன்,02,2016. தங்கள் தகுதிக்கு ஏற்ற ஒரு நல்ல வேலையைத் தேடுவது, இன்றும் இளைஞர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருப்பதாக, உலக தொழிலாளர் அமைப்பான ILOவில் உரையாற்றிய திருப்பீட பிரதிநிதி கூறினார்.

ILO அமைப்பில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய, நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Ivan Jurkovic அவர்கள், இளைஞர்களுக்கென மாண்புடன் கூடிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது சமூகத்தின் ஒழுக்கரீதி சார்ந்த கடமை என்று கூறினார்.

தொழில் நிறுவனங்களில், தேவைக்கென பயன்படுத்தி பின்னர் தூக்கியெறியப்படும் நுகர்வுப் பொருட்களைப்போல் தொழிலாளர்கள் நடத்தப்படுவது குறித்து கவலையை வெளியிட்ட பேராயர் Jurkovic அவர்கள், இத்தகைய ஒரு போக்கு, மனித குலத்திற்கு எதிராக மனிதனே செயல்படும் நிலைக்கு ஒப்பாகும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியும் மக்கள் நலனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் தன் உரையில் வலியுறுத்தினார் திருப்பீட பிரதிநிதி பேராயர் Jurkovic. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.