2016-06-02 16:30:00

கருவில் வளரும் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராட்டம்


ஜூன்,02,2016. கருவில் வளரும் குழந்தையின் உரிமைகளுக்கு உறுதி வழங்கும் அயர்லாந்து சட்ட திருத்தத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு நிலை குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் Eamon Martin

அயர்லாந்தின் முதுபெரும் தந்தை  என அழைக்கப்படும் அர்மாக் பேராயர் மார்ட்டின் தெரிவிக்கையில், குழந்தைகளின் உரிமை குறித்து மீண்டுமொரு முறை பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருமெனில், குழந்தைகளின் உரிமைக்காக தலத்திருஅவை மிகத் தீவிரமாக போராடும் என்றார்.

ஒரே பாலினத் திருமணம் குறித்த, கடந்த ஆண்டின் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பின்போது தலத்திருஅவை எவ்வளவு தீவிரமாக, அதற்கு எதிராக போராடியதோ, அதைவிட அதிகமாக குழந்தைகளின் உரிமைக்காக போராடும் என்றார் பேராயர் .

கருவில் வளரும் குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்தும் அரசியலமைப்பில் சட்ட திருத்தம் கொண்டு வருவதெற்கென 1983ல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வெற்றிபெற்று, சட்ட திருத்தமும் இடம்பெற்றுள்ள நிலையில் அதனை எதிர்த்து தற்போது குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்பின் எட்டாவது சட்ட திருத்தத்தை மாற்றியமைக்கக் கூடாது என அயர்லாந்து திருஅவை அதிகாரிகள் மக்களை வலியுறுத்தி வருகின்றனர். 

ஆதாரம் : Catholicculture/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.