2016-06-01 16:07:00

இது இரக்கத்தின் காலம்... – வாழ்வோம், வாழ வைப்போம்


ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்குக் காரணம், ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.... இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி.. என எந்தப் பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....!!.

தான் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்து, எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்தது. இறுதியாக, குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிக் குதித்ததை முயல் பார்த்தது. உடனே முயல் சிந்தித்தது, ‘அட!! நம்மையும் பார்த்துப் பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா?’ என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு, தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் அடைந்தது. “தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது முயல். அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் சாக வேண்டும், வாழ்ந்துதான் பார்ப்போமென்று, காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது.

மரணமே வந்தாலும் எதிர்க்கத் துணிந்து, முடிந்தவரை மற்றவரையும் வாழ வைப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.