2016-06-01 17:44:00

30 விழுக்காட்டுப் பெண்களுக்கு சிறுவயதில் திருமணம்


ஜூன்,01,2016. இந்தியாவில், 30 விழுக்காட்டுப் பெண்கள், 18 வயது நிறைவடைவதற்கு முன் திருமணம் செய்து கொள்வதாகவும், பத்து வயதுகூட நிறைவடையாத நிலையில் 78 இலட்சம் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் எனவும் அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இந்த வயதுக்குமுன் திருமணம் செய்வது, குழந்தைத் திருமண தடை சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படும்.

இந்தியாவில் இந்து, முஸ்லிம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பெண்களில், 30 விழுக்காட்டினர், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட, 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும், அவர்களின் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

இதனால், கர்ப்பகால பிரச்சனை மற்றும் குடும்ப வன்முறையில் இப்பெண்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.