2016-05-31 16:18:00

உலகிலுள்ள 5 கோடி நவீன அடிமைகளில் 60% ஆசியாவில்


மே,31,2016. உலகிலுள்ள குறைந்தது 4 கோடியே 58 இலட்சம் நவீன அடிமைகளில், மூன்றில் இரண்டு பகுதியினர் ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளனர் என்று, இச்செவ்வாயன்று வெளியான ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

Walk Free என்ற அமைப்பு வெளியிட்ட  உலகளாவிய அடிமைத்தன குறியீடு 2016 என்ற அறிக்கையில், உலகிலுள்ள நவீன அடிமைகளில் பெருமளவானவர்கள் ஆசியக் கண்டத்தில் உள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை 2 கோடியே 66 இலட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

167 நாடுகளில் எடுத்த ஆய்வில், வட கொரியா, உஜ்பெகிஸ்தான், கம்போடியா, இந்தியா, கத்தார் ஆகிய ஐந்து ஆசிய நாடுகளில், நவீன அடிமைகளின் விகிதாச்சாரம் அதிகம் என்றும், எண்ணிக்கையளவில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், உஜ்பெகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளில் அதிகம் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.  

இந்தியாவில், ஏறத்தாழ ஒரு கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் பேர், நவீன அடிமைகளாக உள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.