2016-05-31 10:59:00

இது இரக்கத்தின் காலம் : வாழும் கலையை நாம் கற்றுக்கொள்ள...


“இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமா அவர்களிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், நமக்கு நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறது.

"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.

எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனிதர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை.

இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள்." என்று தலாய்லாமா சொன்னார்.

வாழாமலேயே இறந்துவிடும் ஆயிரமாயிரம் மனிதர்கள் நடுவே, வாழும் கலையை நாம் கற்றுக்கொள்ள நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பே, இரக்கத்தின் காலம்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.